பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல்

கொவிட் 19 கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாகவும் சுகாதார முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடலொன்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.றிஸ்வின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கல்முனை வலய கோட்டக்கல்வி அதிகாரி பி.எம்.பதுறுதீன் உள்ளிட்ட கல்முனைக் கோட்ட முஸ்லீம் பிரிவு அதிபர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களும் பங்குபற்றினர்.

இதன்போது இக்கலந்துரையாடலில் தாய் சேய் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சி.எம்.பஸில் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் ஆகியோர் கலந்துக்கெண்டு கருத்துரைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.