வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் – வெளிவிவகார அமைச்சு

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ள இலங்கையர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரொனா பரவலை அடுத்து நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில நாடுகள் விமான நிலையங்களைக் கூட இன்னும் திறக்கவில்லை.

தற்போது வழமையான விமான சேவைகள் இடம்பெறாத நிலையும் உள்ளது. இவ்வாறான நிலையில் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ள இலங்கையர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.