தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 11,056 பேர் வரையில் வெளியேறினர்

நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 11,056 பேர்  வரையில் வெளியேறியுள்ளதாக கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் 44 தனிமைபடுத்தும் நிலையங்களில் 5,154 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தல் நிலையங்களான பனிச்சங்கேணியில் 7 பேர் மற்றும் ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையிலுருந்து 8 பேர் என மொத்தம் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் பின்னர் கடந்த 29 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே, கடந்த 29ஆம் திகதி வரை 11,056 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 29 ஆம் திகதி வரை மொத்தம் 708 கடற்படை வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்றும் அவர்களில், 366 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், மேலும் 342 கடற்படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.