வடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID யின் கீழ் விசாரணை

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தமது பாதுகாப்பின் கீழ் வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

துன்னாலை பகுதியைச் பொன்னுத்துரை சுஜீதரன் (வயது 28) என்பவரையே விசாரணைக்காக கைது செய்வதற்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு தேடி வந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி குறித்த நபர் இராணுவ புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த நிலையில், சந்தேக நபர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியில் கடந்த 27ஆம் திகதி குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. சட்டவிரோத மண் அகழ்வுகள், மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் பொலிசார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன், குறித்த சந்தி பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும்.

இந்நிலையில் அன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் வந்திறங்கியபோது நிலத்தில் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததிலையே பொலிஸார் இருவர் காயமடைந்தனர்.

சட்டவிரோத மண் அகழ்வோர் பொலிஸாரை இலக்கு வைத்து அதனை அவ்விடத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்தனர்.

இந்நிலையிலையே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகபரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தமது பாதுகாப்பின் கீழ் வைத்து தீவிர விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.