அம்பாறையில் தமிழ் சி.என்.என். நிவாரணப் பணி! 350 இற்கும் மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர், முன்னாள் போராளிகளுக்கு 

தமிழ் சி.என்.என். குழுமத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான நிவாரணப் பணி 4 ஆவது கட்டமாக நீலாவணையில் மேற்கொள்ளப்பட்டது.

தென்மராட்சி சேவை நிறுவனம் கனடாவின் போசகர் வீ எஸ் துரைராசா குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன் 350 இற்கும் மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர், முன்னாள் போராளிகளுக்கு  வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ் சி.என்.என். குழுமம் யாழ். மற்றும் வன்னி மாவட்டங்களில் பல்வேறு பட்ட உதவித்திட்டங்களை பல்வேறு சேவை நோக்குள்ள நல்லுள்ளம் படைத்தவர்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

இதன் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் கடமையாற்றும் தமிழ் சி.என்.என். இன் ஆசிரிய பீட குழுமத்தினரிடம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மாற்றுவலுவுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த உலர் உணவு வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள நீலாவனை பிரதேசத்தில் வழங்கப்பட்டது.

தமிழ் சி.என்.என். குழுமத்தினருடன் இணைந்து எம் உறவுகளுக்கு சேவை மேற்கொள்ள விரும்பும் கருணை உள்ளங்கொண்டோர், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கனடாவில் உள்ள நல்லுள்ளம் படைத்தோர் இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு: Viber 0778630268
Email: ahitamilcnn@gmail.com

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.