சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் 291 பேர் தாயகம் திரும்பவுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர்.

அதற்கமைய அங்கு தங்கியுள்ள 291 பேர் இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பவுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமையும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகும்.

இதனையடுத்து ஏனைய நாடுகளில் தங்கியுள்ள தத்தமது நாட்டு மக்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதற்கமைய இலங்கை அரசாங்கமும் தமது நாட்டுப் பிரஜைகளை ஏனைய நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலம் தொடர்ச்சியாக அழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.