நாட்டில் விளைகின்ற பயிரை இறக்குமதி செய்ய அனுமதி கிடையாது- சமல்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதிக்காதென வேளாண்மை துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்
அம்பலாந்தோட்டை- தெலவில்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காகவே இத்தகையதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் விவசாயத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை தற்போதைய அரசாங்கம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை