கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு!

ஆந்திரா,  கர்நாடகா,  குஜராத் உள்பட 9 மாநிலங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் எதிர்வரும் ஜுன் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குறித்த  மாநிலங்களவைக்கான தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் அன்றைய தினமே தேர்தல் தொடர்பிலான முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா,  குஜராத்,  ஜார்க்கண்ட்,  மத்திய பிரதேசம்,  மணிப்பூரில் , மேகாலயா , ராஜஸ்தான்,  கர்நாடகா,  அருணாசல பிரதேசம்,  மிசோரம்  என  மொத்தம் 24 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வலுபெற்று வரும் நிலையில், தேர்தல் குறித்த அறிவிப்புகள் எவ்வாறு சாத்தியம் ஆகும் என்பது தொடர்பாக அரசியல் அவதானிகள் ஆய்வு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.