ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ரயிலில் பயணிப்பது தொடர்பாக இதுவரை பதிவு செய்யாத உத்தியோகத்தர்கள் தமது நிறுவனங்கள் மூலம் பதிவு செய்துகொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்துகொள்ளுமாறு அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் ஊடாக பதிவு செய்து அவர்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர், சில பயணிகள் ரயிலில் பயணிப்பதனை தவிர்த்து வருவதாக திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் சிக்கல் நிலைமை ஏற்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.