நீதிமன்றம் வழங்கிய கட்டளை நல்ல தீர்ப்பு – தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஹூல் தெரிவிப்பு

உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய கட்டளை நல்லதொரு தீர்ப்பு என்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் திகதி மற்றும் ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கருத்துத் தெரிவிக்கையில்,

“உயர்நீதிமன்றம் வழங்கிய கட்டளை நல்லதொரு தீர்ப்பு. தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமானது. எங்களை அதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள், இப்படிச் செய்யுங்கள் என்று எந்த அறிவுறுத்தலையும் உயர்நீதிமன்றம் வழங்கவில்லை. எங்களைச் சுயாதீனமான இயங்கும் வகையில் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.