இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,230 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,230 மில்லியனாக அதிகரித்துள்ளது.

WNS Global Services (Pvt) Ltd நிறுவனம் 5,895,000 ரூபாவையும், கிரிபத்கொட ஈரியவெடிய ஸ்ரீ ரத்ன விகாரையின் சங்கைக்குரிய பங்களாதேஷ் சந்திரஜோதி தேரர் 100,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். அதற்கான காசோலைகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

ஜெனரல் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம் 5 மில்லியன் ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளது. உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதியிடம் அதற்கான காசோலையை கையளித்தார்.

சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகள் முறைமையை பலப்படுத்தும் பிரிவின் திட்ட முகாமைத்துவ பிரிவு 37,358.71ரூபாவையும், ஜே.ஆர். ஜயவர்தன மத்திய நிலையம் 145,183.30 ரூபாவையும், சங்கைக்குரிய லத்பந்துரே ராஹுல தேரர் 100000ரூபாவையும், சிங்க லேண்ட் சேல் தனியார் நிறுவனம் 500,000 ரூபாவையும், திரு. சந்தன சேனாரத்ன 200,000 ரூபாவையும் அன்பளிப்பு செய்துள்ளனர்.

இடுகம இணையத்தளத்தின் ஊடாக கிடைத்துள்ள தொகை 1,146,200 ரூபாவாகும். தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,230,748,037.77 ரூபாவாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.