நீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்

நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியதன் மூலம் தேர்தல் நடாத்தி அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வது என்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் நிலைமையினை கருத்தில்கொண்டு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை சிறப்பாக செயற்படுவதாகவும் கொரோனா விடயத்தில் வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா ஒழிப்பு விடயத்தில் வெற்றிகரமான முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சிறந்த முறையில் நாட்டினை நிர்வகித்து  வரும் நிலையில் நாடாளுமன்றத்தினை கூட்டவேண்டிய தேவையில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.