விஜய் மல்லய்யாவை உடனடியாக இந்தியா அழைத்து வர வாய்ப்பில்லை – தூதரக அதிகாரிகள்

தொழிலதிபர் விஜய் மல்லய்யாவை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் சட்டரீதியான நடவடிக்கைகளால் விஜய் மல்லயாவை உடனடியாக இந்தியா அழைத்துவர வாய்ப்பு இல்லை என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு மும்பைக்கு விஜய் மல்லய்யா அழைத்து வரப்பட்டதாக சில ஊடக தகவல்கள் வெளியானதையடுத்து தூதரக அதிகாரிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை செலுத்தத் தவறி லண்டனுக்குத் தப்பிச் சென்ற மல்லையாவை இந்தியாவை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது .

அவர் இங்கிலாந்து சட்டப்படி அடைக்கலம் கோரி மனு அளித்திருந்தால் அவரை நாடு கடத்த வாய்ப்பிருக்காது என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்துவர சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் சில சட்டரீதியான நடவடிக்கைகளால் விஜய் மல்லய்யாவை அழைத்துவருவதில் மேலும் தாமதமாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.