வாகனேரி குளத்துமடு பகுதியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வாழைச்சேனை – வாகனேரி குளத்துமடு பகுதியில் கட்டுத் துப்பாக்கியுடன் 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுத் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் ஈயக் குண்டுகளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கட்டுத் துப்பாக்கி அதற்கு பயன்படுத்தும் ஈயக் குண்டுகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறுபட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை கைது செய்யும் வகையிலும் பொலிஸார், விசேட அதிரடிப்படைப் படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.