மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்

நாட்டில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பட்டப்படிப்பிற்கு தகுதி பெறும் மாணவர்களில் 31 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அதனால் ஏனைய மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வியற்கல்லூரிகளுக்கு அனுமதி பெறுகின்றனர்.

இந்நிலையில், இந்த வருடம் புதிய பீடங்களையும் புதிய கல்வியல் பிரிவுகளையும் அமைப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு 37,500 பேரை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.