சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை!

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்க அமெரிக்காவின் போக்குவரத்துறை தீர்மானித்துள்ளது.

எனினும், சர்ச்சைக்குரிய இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஒப்புதலுக்கு பிறகே நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டெழ தொடங்கியபோதும், அமெரிக்க விமானங்களை தங்களது நாட்டிற்குள் அனுமதிக்காத சீனாவை தண்டிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் போக்குவரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க போக்குவரத்துறை உத்தரவின் படி, கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் இடைவிடாது, குறைந்த எண்ணிக்கையில் சீனா – அமெரிக்கா இடையே பயணிகள் விமானங்களை இயக்கி வந்த எயார் சீனா, சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ், சீனா சதர்ன் எயார்லைன்ஸ் மற்றும் ஹைனன் எயார்லைன்ஸ் உள்ளிட்டவற்றின் விமானங்கள் ஜூன் 16ஆம் திகதி முதல் அமெரிக்காவில் தரையிறங்குவதற்கு தடை விதிக்கப்படுகின்றது.

வர்த்தகம், கொரோனா வைரஸ் விவகாரம், ஹொங்காங் பிரச்சனை உள்ளிட்டவற்றில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.