கொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்குகிறது.
இதன்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால், 449,834பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யாவில் 8,726பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 144பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,528ஆக உள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 231,626 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 212,680பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை