யாழில் ஒருவித வைரஸால் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- போதனா வைத்தியசாலையில் ஒருவித வைரஸ் காய்ச்சலாம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வண்ணார்பண்ணையை சேர்ந்த லிங்கேஸ்வரி சதீஸ்குமார் (40 வயது) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு, ஒருவிதமான வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வைரஸினால் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் பல பாகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று மாலை,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அத்துடன் அவர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகின்றபோதும் அது உறுதி செய்யப்படவில்லை. எனவே அவருக்கு ஏற்பட்ட தொற்று பற்றி அறிய, மேலதிக பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதேபோன்ற மர்ம வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர், வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.