டெல்லியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

டெல்லியில் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று புவியியல் ஆய்வு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் 10 மிதமான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அப்பகுதியில் பூமிக்கடியில் நில அதிர்வுகள் தொடர்வதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நேரமோ சரியான இடமோ குறிப்பிட முடியாவிட்டாலும் டெல்லி  என்.சி.ஆர் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவே டொக்டர் காலாசந்த் தலைமையிலான இமாலய புவியியல் வாடியா ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இதில் மிகவும் உயரமான கட்டடங்களைக் கொண்ட டெல்லி நகரம் நில அதிர்வின் மிகவும் ஆபத்தான பாதையில் இருப்பதாக கருதப்படுகிறது. 4 புள்ளி 5 ரிக்டர் வரை நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் அது 6 வரை போனால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி விடும் என்று  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.