சட்டசபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறார் அமித்ஷா!

பீகார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல்  அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்ற நிலையில், அமித்ஷா பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக  பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சமூகவலைத்தளங்களினூடாக பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.