பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் இதுவரை 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 1,718 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 957 ஆக உள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1,835 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.