கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கு விசாரணை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு

கேகொடை நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக ஜனவரி 22 ஆம் திகதி நீதிபதி கிஹான் பிலபிட்டிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை வௌியிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த இடைக்கால தடை உத்தரவு கோரிய ரிட் விண்ணப்பம் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.