வவுனியாவில் இளைஞர் ஒருவர் திடீர் மரணம்!

வவுனியா,  உக்கிளாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் காலை, வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சடலத்தை பார்வையிட்ட வவுனியா திடீர் மரண விசாரனை அதிகாரி சிவநாதன் கிசோர், விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

உடற்கூற்று பரிசோதனையிலும் இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில், மேலதிக பரிசோதனைகளுக்காக அவரது மாதிரிகள் பெறப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த சந்தியோகு அன்ரணி (35 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.