தேர்தல் திகதி குறித்து அறிவிக்கப்படுமா? – முக்கிய கலந்துரையாடல் இன்று

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பாக தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) முற்பகல் முக்கிய சந்திப்பில் ஈடுபடவுள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை ஒன்று கூடினர். எனினும் அன்றைய தினம் அது தொடர்பான எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து, இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்த வாரத்திற்குள் பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பொதுத் தேர்தல் திகதி குறித்து இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மாவட்ட உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.