6 மாதங்களுக்கு கடன் அறவீடு வேண்டாம்!- கிளிநொச்சியில் கவனயீர்ப்பு

6 மாதங்களுக்கு கடன் அறவீடு மேற்கொள்ளப்படாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம், நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி, பூநகரி, வலைப்பாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க இளைஞர், யுவதிகளினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப் பகுதியில் கடன் அறவீடுகளை 6 மாதங்களுக்கு மேற்கொள்ளாதிருப்பது தொடர்பாக ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலயைில் தொடர்ந்தும் கடன் அறவீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அறவீடு மேற்கொள்ளாது இருப்பதை உறுதி செய்யுமாறு தெரிவித்தே குறித்த கனவயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.