இராணுவத்தினர் சாதிக்க கூடிய சில விடயங்களை பொதுமக்களால் சாதிக்க முடியாது – விமல்!

இராணுவத்தினர் சாதிக்க கூடிய சில விடயங்களை பொதுமக்களால் சாதிக்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியில் தற்போது பணியில் உள்ள படை அதிகாரிகள் இடம்பெற்றிருப்பது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு தனக்கு வழங்கப்பட்ட எந்த பணியையும் சிறப்பாக செய்யக்கூடிய திறமையுள்ளது என தெரிவித்துள்ள அவர் சுங்கத்திணைக்களம் தற்போது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியின் தலைமையின் கீழ் இயங்குவதால் அதனால் சிறப்பாக செயற்படமுடிகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலணியால் ஜனநாயகத்திற்கும் நீதித்துறைக்கும் ஆபத்து என எதிர்கட்சியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.