விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி,  குளத்துமடு பகுதியில் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  சில ஆயுதங்கள், இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை புலனாய்வு பிரிவினருக்கு இவ்விடயம் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த தகவலுக்கமைய, வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் வாகனேரி குளத்துமடு காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் ஐந்து கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு செல்வதற்காக அணியும் ஆடை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. இவைகள்  வாழைச்சேனை பொலிஸில் பாரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.