இணுவில், ஏழாலையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றில்லை

இந்தியப் புடவை வியாபாரியோடு தொடர்பில் இருந்த இணுவில், ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த  28 பேருக்கும் தொற்றில்லை என்று பி.சி.ஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் இருந்து இந்தியாவுக்குச் சென்ற புடைவை வியாபாரி ஒருவருக்கு , கொரோனாத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வியாபாரியோடு தொடர்புகொண்டிருந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் 28 பேரிடம் இருந்தும் மாதிரிகள் பெறப்பட்டு பி. சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. சோதிக்கப்பட்ட 28 பேருடைய மாதிரிகளின் அடிப்படையில் எவருக்கும் தொற்றில்லை என்று தெரியவந்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.