முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் சத்தியப் பிரமாணம்…

அம்பாரை மாவட்டம் காரைதீவினைச் சேர்ந்த  தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக  12.06.2020 திகதியன்று   அம்பாரை மாவட்ட நீதிமன்ற நீதவான்  முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து  கொண்டார்.
கமு / கமு / இ.கி.மி பெண்கள் பாடசாலை காரைதீவில்  ஆசிரியராகக் கடமை புரியும் இவர், கடந்த 12 வருடங்களுக்கு மேலாக  சம்மாந்துறை கல்வி வலயத்தில் கமு / சது / வளத்தாப்பிட்டி அ.த.க. பாடசாலையில் ஆசிரிய சேவை புரிந்தவராவார்.
தமது ஆரம்பக் கல்வியை கமு / கமு / விஷ்ணு வித்தியாலயத்திலும், இடைநிலை உயர்கல்வியை கமு/ கமு/ விபுலானந்த மத்திய கல்லூரியிலும் பெற்றுக் கொண்டவர், வவுனியா தேசியக் கல்விக் கல்லூரியில் கற்பித்தல் தொடர்பான தேசிய கல்வி டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த இந்து சமய டிப்ளோமா பட்டதாரியாவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.