தேர்தல் வெற்றியின் பின்னர் சிறிகொத்தவின் பொறுப்பை ஏற்பேன்- சஜித்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது கட்சி வெற்றி பெற்ற பின்னர் சிறிகொத்தவின் பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி ஒருபுறமும், மறுபுறம் பிரதமரும் இருப்பதில் எந்தப் பிரச்சினையும் எனக்கு கிடையாது.
மேலும் எதற்காகவும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று பிரதமராக பொறுப்பேற்பேன்.
அத்துடன், பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவையும் மக்கள் ஆணையுடன் பொறுப்பேற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை