இலங்கை சிவில் சமூகத்தில் மங்கள பங்கு வகிப்பார் – மனோ கணேசன் தகவல்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிவில் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை வகிப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மனோ கணேசன், மங்கள சமரவீர அரசியலில் இருந்து வெளியேறுவது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “அவரது பங்கு இலங்கை அடையாளத்தை வலுப்படுத்தும் மற்றும் இலங்கை பன்முகத்தன்மையை எங்கள் முன்னணி பலமாக அங்கீகரிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அதிரடி அறிவிப்பு ஒன்றினை விடுத்திருந்தார்.

எனவே எதிர்வரும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாக்குகளை வழங்குவதைத் தவிர்க்குமாறு மாத்தறை மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த வேட்பாளரான நிலூகா ஏக்கநாயக்க மற்றும் காலி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த வேட்பாளரான டேனட் பன்னியன்துவகே ஆகியோரும் தேர்தல் களத்தில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.