கொழும்பில் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாது – ஜனகன் நம்பிக்கை!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பில் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் நம்பிக்கை வெளியிட்டார்.

கொழும்பில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

கொழும்பில் இம்முறை அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவதாகவும், எனினும் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் சிதறாது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பில் 924 வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுவதாகவும், அவர்களில் ஆறு பேரே தமிழ் வேட்பாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக பெரும்பான்மையினரின் வாக்குகளே அதிகளவில் சிதறும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.