காரைதீவை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையை மூன்று மாதங்களாக காணவில்லை…

காரைதீவை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 72 வயதுடைய கணபதிப்பிள்ளை சின்னத்துரை என்பவரை காணவில்லை என அவரின் மகள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு 1ம் பிரிவில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை சின்னத்துரை என்பவர் கடந்த மூன்று மாதங்களாக எங்கே இருக்கின்றார் என்கிற எதுவித தகவலும் தெரியாமலும் இது வரையில் வீடு திரும்பவில்லை என்பதாலும் அவரின் மகளினால் அவரை காணவில்லையேன தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவரை யாரேனும் கண்டால் 0754391942 , 0769154665 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு அவரின் மகள் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.