பொதுத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கல்!

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கலான நிலைமை  ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி, ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் வருவதற்கான சூழ்நிலைகள் காணப்படுகின்றன.

ஆனாலும், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இராஜதந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதோடு, தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டுமென அரசாங்கம் கூறியுள்ளது.

ஆகவே சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டுக்குள் வருகை தரும்போது அவர்களுக்கு கொரோனா சட்ட விலக்களிக்கப்படாதிருக்குமாயின், தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதில் சிக்கலான நிலைமைகளே ஏற்படுமென கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.