விஷேட தேவையுடையோர் வீட்டுத் திட்டத்தில் வசிக்கின்ற மக்களின் காலடிக்குச் சென்று ஆயுர்வேத மருத்துவ நடமாடும் சேவை இன்று ஆரம்பித்து வைப்பு.

பைஷல் இஸ்மாயில் –
அட்டாளைச்சேனை – சம்புநகர் கிராமத்தில் விஷேட தேவையுடையோர் வீட்டுத் திட்டத்தில் வசிக்கின்ற மக்களின் காலடிக்குச் சென்று ஆயுர்வேத மருத்துவ சேவையை வழங்கும் நடமாடும் வைத்திய முகாம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மக்கள் ஆரோக்கியத்துடன் வழவேண்டும் என்பதற்காகவே, இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இச்சேவையை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய குழுவினரால் மாதம் இரு முறை நாடாத்த திட்டமிடப்பட்டு இன்றிலிருந்து முன்னெடுக்கப்படும் என்றும் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கதினால் இலங்கை மட்டுமல்லாமல் உலகிலுள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து எமது மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியன இணைந்து இந்தச் சேவையை முன்னெடுத்து வருகின்றது என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கெதிராக, மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து அவர்களின் தேகாரோக்கிய தன்மையயை மேம்படுத்தும் நடவடிக்கையை கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதரின் முயற்சின் பலனால் இச்சேவை அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல கிராமங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த இலவச நடமாடும் வைத்திய சேவையில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.பி.எம்.ரஜீஸ், திருக்கோவில் ஆயுர்வேத கிராமிய வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி ஐ.எல்.அப்துல் ஹை, வைத்தியர்களான எஸ்.எம்.றிசாத், எம்.ரீ.அமீறா மற்றும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.