வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் அச்சிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன. இவ்வாறு அச்சிடப்படவுள்ள வாக்குச் சீட்டுகளில் மிகவும் நீளமான வாக்குச் சீட்டு கம்பஹா மாவட்டத்திற்காக அச்சிடப்படவுள்ளது.

அகலமான வாக்குச் சீட்டு கொழும்பு, வன்னி, திகாமடுல்லை மற்றும் மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களுக்கு அச்சிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.