அரச ஊடகம் பிரதமருக்கு ஆதரவாக பிரச்சாரம்- கபே குற்றச்சாட்டு

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரச ஊடகமொன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றதென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம் சுமத்தியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கபே இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் கபே தெரிவித்துள்ளதாவது, ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 50 வருடகால அரசியல் வாழ்க்கை பற்றிய தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் குறித்த அரச ஊடகம் அவரை ஊக்குவிக்கின்றது.

இது அரச வளங்களை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கை ஆகும். எனவே இவ்விடயத்தில் தேர்தல் ஆணைக்குழு  நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.