திருகோணமலை மற்றும் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 310 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்த மூன்று பேர் விளக்கமறியலில்…

திருகோணமலை மற்றும் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 310 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்த மூன்று பேரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(15) உத்தரவிட்டார்.
கிண்ணியா ரகுமானிய்யா நகர் மற்றும் மஹ்ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 24 வயதுடைய இருவரும்,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவருமாக மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கிண்ணியாவில் இருவரும் தலா ஐம்பது மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம் உடைமையில் வைத்திருந்த நிலையிலும்,திருகோணமலையில் சந்தேக நபரே 210 மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளை வைத்திருந்த நிலையிலும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை அந்தந்த பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.