உமா-ஓயா திட்டம் : 85 ஈரானியர்கள் இலங்கைக்கு வருகை

உமா-ஓயா திட்டத்தில் பணியாற்ற 85 ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானிய விசேட விமானத்தில் இலங்கைக்கு அவர்கள் வந்ததாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

அவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க கூறினார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான நீர் மின் உற்பத்தி இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 120 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு 529 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது, மொத்த திட்ட செலவில் 85 சதவீதம் ஈரான் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.