பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயற்சித்த மூவர் கைது

அநுராதபுரம் – திலோகம வனப்பகுதியில் பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயற்சித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை ரஜ்கம்மன வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கண்டி – அக்குரனை பகுதியைச் சேர்ந்த மூவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 கிளிகள் மற்றும் 5 குருவிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன, சந்தேகநபர்கள் கண்டி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து 60,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பறவைகள், கிரிதலே மிருக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.