யாழ் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பொது சந்தைகளும் இன்று (திங்கட்கிழமை) மீள திறக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகரித்ததன் காரணமாக அங்குள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில்,  வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க  மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை, மருதனார்மடம் பொதுச்சந்தை மற்றும் ஏனைய பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன.

மேலும் சந்தைகளில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வியாபார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தைகளில் பொலிஸார், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.