தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக  விஞ்ஞான பீடத்தில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்..

(நூருல் ஹுதா உமர்)

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக  விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கை மற்றும் குறித்த மாணவர்களுக்கான பரீட்சைகளைகளையும் நாடாத்துவதற்குமான  முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேற்படி கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக பல்வேறு சுற்று சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில்; உதவி விரிவுரையாளர்கள், செய்துகாட்டுனர்கள் மற்றும் கல்விசாரா உழியர்களுடனான விஷேட சந்திப்பு இன்று (18) பிரயோக  விஞ்ஞான பீட ஆறாம் இலக்க மண்டபத்தில் பீடாதிபதி கலாநிதி யூ.எல். செய்னுடீன் தலைமையில் இடம்பெற்றது.

கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக  விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இணைய வழியாக இடம்பெற்று வரும் இந்தசந்தர்ப்பத்தில்; முதற்கட்டமாக விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கைகள் மற்றும் பரீட்சைகளைகளையும் இறுக்கமான  சுகாதார நடைமுறைகளுடன் நாடாத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளதாக பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன் தெரிவித்தார்.

குறித்த பிரிவில் கற்கும்  மாணவர்கள் கடந்த 2021.01.17 ஆம் திகதி பீடத்துக்குள் உள்வாங்கப்பட்டு; விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான மேற்படி கல்வி செயற்பாடுகள்,  14 நாட்களின் பின்னரே இடம்பெறவுள்ளதாகவும் பீடாதிபதி செய்னுடீன் இங்கு கருத்து வெளியிட்டார்.

பிரயோக  விஞ்ஞான பீடத்தில்; சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான அத்தனை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் மாஸ்க் அணிதல், கைகழுவுதல் மற்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றுதல் போன்ற அத்தனை நடவடிக்கைகளும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமூக இடைவெளியை பின்பற்றி இடம்பெற்ற குறித்த  நிகழ்வில் திணைக்களங்களின் தலைவர்களான கலாநிதி எம்.எச்.ஹாறுன், கலாநிதி ஏ.எம்.என்.எம்.அதிகாரம் மற்றும் ஏ.எல்.ஹனீஸ் ஆகியோருடன் சிரேஷ்ட  உதவி நூலகர் கலாநிதி எம்.எம்.மஸ்றூபா,  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் மற்றும் உதவி பதிவாளர் எஸ்.அர்சனா ஆகியோரும் உதவி விரிவுரையாளர்கள், செய்துகாட்டுனர்கள் மற்றும் கல்விசாரா உழியர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.