புனானை சிகிச்சை முகாமில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளி பிடிப்பட்டார்

புனானை சிகிச்சை முகாமில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பிச்சென்ற கொரோனா நோயாளி பிடிப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

43 வயதான குறித்த நபர், எஹலியகொட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ – மீதொட்ட பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றும் குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

பி.சி.ஆர் முடிவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 17ஆம் திகதி, கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் புனானை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்றிரவு 7.30 மணியளவில் தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.