வடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது!

மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, உயிரிழந்தவர் கடந்த 30ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், கடந்த 16ஆம் திகதி குறித்த நபருக்கு வைத்தியசாலையில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதுடன் அவர், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை நாட்டில் கொரோனாதொற்றினால்
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.