பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் பிரதேச செயலாளர் ஒருவர் கைது

பாலியல் பலாத்கார சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட கிரிஹெல்ல பிரதேச செயலாளர் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கிரிஹெல்ல பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டு இரத்தினபுரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்றைய தினம் (19) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பிரதேச சிறுவர் பாதுகாப்பு அதிகாரியால் கடந்த 15 ஆம் திகதி இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக கிரிஹெல்ல பொலிஸார் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.