விமான நிலையங்கள் மீளத் திறப்பு – ஓமானில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது

இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இன்று (21) திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் விமானம் ஓமானில் இருந்து வந்துள்ளது.

ஓமானில் இருந்து குறித்த வணிக விமானம் இன்று காலை 07.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

இந்த விமானத்தின் மூலம் சுமார் 50 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்பதுடன், அவர்கள் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.