தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம் நேற்று(20) நினைவு கூறப்பட்டுள்ளது.

கடந்த 1952 ஆண்டு தமிழ்மக்களின் பிரதிநிதியாக பட்டிருப்பு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்ததுடன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவராகவும் 1970 ஆண்டு வரை செயற்பட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே களுவாஞ்சிக்குடியிலுள்ள சி.மூ. இராசமாணிக்கத்தின்  சிலைக்கு  மலர்மாலை அணிவித்து நினைவு கூறல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் இரா. சாணக்கியனின் பாட்டனார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.