தம்பலகாமம் பொற்கேணி கிராமத்தில் நிலக்கடை அறுவடை

தம்பலகாமம் பொற்கேணி கிராமத்தில் பயிரிடப்பட்ட நிலக்கடை அறுவடை நேற்று (20)தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி சிறீபதி தலைமையில் நடைபெற்றது.
உணவுற்பத்தி அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட இப்பயிர் மூலம் பயனாளிகளுக்கு உயர்ந்த விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கான அனுசரனையை அகம் மனிதாபிமான வளநிலையம் வழங்கியிருந்தது.
இந்நிகழ்வில் குறித்த நிறுவனத்தின் பிரதி இணைப்பாளர் அ. மதன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜே.சுகந்தினி, மாவட்ட அரச சார்பற்ற நிறுவன இணைப்பதிகாரி கே.நிர்மலகாந்தன் , சக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.