அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு கோட்டா மற்றும் மஹிந்த வாழ்த்து

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக  பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும் உப ஜனாதிபதியாக  கமலா ஹாரிஸும் நேற்று பதவியேற்றனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ- தானும் தனது அரசாங்கமும் ஒரு வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்து தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள இராஜாந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.