திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று (21) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை முதலில் அவர்களே கையாளுவதாகவும் எனினும் அதற்குப் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வைத்தியசாலை வட்டாரங்கள் தமக்கு பெற்றுத்தரவில்லை என தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

சமூக இடைவெளியைப் பேணி முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து சிற்றூழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

பாதுகாப்பு அங்கிகள், கையுறைகள், முகக் கவசங்கள் என்பன அரசாங்கத்தாலோ வைத்தியசாலை நிர்வாகத்தினராலோ வழங்கப்படுவதில்லை எனவும் தமது சொந்த செலவிலேயே இவற்றினை பெற வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் சிற்றூளியர்களுக்காக அரசினால் வழங்கப்பட்டிருக்கும் நீல நிற அங்கியைக்கூட வைத்தியசாலை நிர்வாகம் இன்னமும் வழங்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.